Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -5)



சூப்பர் முஸ்லிம் சேனலின் ஆதர்ஷ நாயகர் இம்ரான் ஹுஸைன் என்பவர். இவரைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலமாக இவருடைய கருத்துக்களின் தன்மையை நாம் அறிய முடியும். 

கரீபியன் தீவுகளின் டிரினிடாட் (Trinidad) எனும் பகுதியில் 1942 ஆண்டில் பிறந்தார் இம்ரான் ஹுஸைன். 

வாலிப வயதில் எகிப்தின் ஒரு பல்கலைகழகத்தில் படித்த இவர் அதை இடையில் நிறுத்திவிட்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு முஹம்மத் ஃபஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி என்பவரிடம் மாணவராக சேர்ந்து கொள்கிறார். (கராச்சி பல்கலைகழகத்தில் படித்து முதுகலை பட்டமும் பெற்றார்) 

உலக அரசியலில் ஆர்வம் கொண்ட இம்ரான் ஹுஸைன், முஸ்லிம்கள் சந்திக்கும் அரசியல் நெருக்கடிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். 

"அதிகாரம்" (Power) என்ற ஒற்றைச் சொல்தான் உலகையே இயக்குகிறது என்பதைக் கண்டு கொண்டார். அந்த அதிகாரம் இருப்பவர்தான் உலக அரசியலை தீர்மாணிக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். அந்த அதிகாரம் யூதர்களிடத்தில் குவிந்திருப்பதைக் கண்டார். 

நாடற்று திரிந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை எப்படி உருவாக்கினர் என்பதை ஆய்வு செய்தார். உலகத்தில் அதிகாரம் உள்ள நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அந்த நாடுகள் மூலமாக தங்களுக்கான நாட்டை யூதர்கள் அமைத்துக்கொண்டதாக பார்த்தார். 

உலகத்தில் எத்தனையோ பகுதிகள் கேட்பாரற்று அனாமத்தாக இருக்கும் நிலையில் அங்கு சென்று தங்களுக்கான நாட்டை உருவாக்காமல் பாலஸ்தீனத்திற்கு சென்று அங்கு பிரச்சினைகளை உருவாக்கி பிரச்சினைகளுடனேயே வாழும் நிலையை யூதர்கள் ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பதை ஆராய்ந்தார். 

யூதர்களின் "புனித பூமி"யான (Holy land) ஜெருஸலம் என்பதை மீட்பதற்காகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டையே அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர் என்பதாக  அவர் முடிவு செய்தார். 

கவிஞர் அல்லாமா இக்பால் மற்றும் மௌலானா மௌதூதி போன்றவர்களின் கருத்துக்களை படித்து பரந்த அறிவைக்கொண்டிருந்த இம்ரான் ஹுஸைன் அவற்றை இன்னும் ஆராயத் தொடங்கினார். 

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்பே அதைப்பற்றி எச்சரிக்கை செய்ந்திருந்த கவிஞர் இக்பாலின் கவிதையில் தனது மனதை பறிகொடுத்தார் இம்ரான் ஹுஸைன்.

யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு மீள்குடியேற்றம் செய்ததை,  யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் வெளிவருவார்கள் (21:96) என்ற குஆன் வசனத்தோடு முடிச்சு போட்ட கவிஞர் இக்பாலின் கவிதையை டெவலப் செய்தார் இம்ரான் ஹுஸைன். 

யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அடைத்து வைத்த துல்கர்னைன் என்பவர் சைரஸ் மன்னர்தான் என்ற 
மௌலானா மௌதூதி அவர்களின் கருத்தை அதில் இணைத்தார்.

புனித பூமி (Holy land) என்பதைச் சுற்றி யஃஜுஜ் மஃஜூஜ் என்ற கதாபாத்திரங்களை வைத்து துல்கர்னைன் என்ற ஹீரோவை முன்னிலைப்படுத்தி தன்னுடைய திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார் இம்ரான் ஹுஸைன். 

"நாம் அழித்து விட்ட ஊராருக்கு (மீண்டு வருவது) தடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப வர மாட்டார்கள்" (21:95) என்ற வசனத்தை கையில் எடுத்தார். இதில் கூறப்படும் ஊர்(Town) என்பது  ஜெருஸலத்தை குறிக்கிறது என்றார். 
இதனுடன் அடுத்த வசனத்தை இனைத்தார். 

"முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்" (21:96) என்ற வசனத்தில் சொல்லப்படுவது, யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் மீள்குடியேற்றம் செய்ததையே குறிக்கும் என்றார். 

அந்த வசனங்களை இப்படி அர்த்தம் கொள்ள இடமிருக்கிறதா என்று கேள்வியெழுப்புபவர்களை, குர்ஆனைஅனுகும் முறை (Methodology) தெரியாதவர்கள் என்று விமர்சித்தார். 

தஜ்ஜால் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்றார். தஜ்ஜால் என்ற வார்த்தையே குர்ஆனில் இல்லையே என்று திருப்பி கேட்டால், தான் சொல்லும் முறையில் குர்ஆனை அனுகினால் தஜ்ஜால் குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம் என்றார். 

குர்ஆனை எப்படி அனுக வேண்டும் என்பதற்கு ஒரு புத்தகம் வெளியிட்டார். 

Book's name : "Methodology for Study of The Qu'ran"

இம்ரான் ஹுஸைனின் அனைத்து சேட்டைகளையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த ஆலிம் பெருமக்கள், அவருடைய  சேட்டைகள் இனியும் பொறுப்பதற்கில்லை என்ற நிலை வந்தபோதுதான் இம்ரான் ஹுஸைனின் பேச்சுக்களை கேட்க வேண்டாம் என்று பொதுவெளியில் அறிவித்தனர். 

இம்ரான் ஹுஸைனின் பல சேட்டைகளில் நாம் இரண்டு சேட்டைகளை மட்டும் பார்த்துவிட்டு இம்ரான் ஹுஸைனின் தரத்தையும் அவரின் பேச்சுக்களை போற்றிப்புகழும் சூப்பர் முஸ்லிம் சேனலின் தரத்தையும் முடிவு செய்வோம். 

(1) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பாக ஸஹீஹ் புஹாரியில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்பது ஒரு சேட்டை. 

(2) 'ஷியா'க்கள் முஸ்லிம்கள்தான் என்பது இரண்டாவது சேட்டை. 

முதலாவது சேட்டையைப் பார்ப்போம்...

"நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் வாழ்ந்தேன்"

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)

நூல் : புஹாரி 5133

மேற்கண்ட ஹதீஸ் ஸஹீஹ் (ஆதாரபூர்வமானது) என்று கருதப்படுகிறது. ஆனால், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்கிறார் இம்ரான் ஹுஸைன். 

பெண்களையே திருமணம் செய்யச் சொல்லி குர்ஆன் கூறுகிறது. ஆனால், ஆறு வயது குழந்தையை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ததாக ஹதீஸ் கூறுகிறது. 
குர்ஆனுக்கு முரணாக இருக்கும் இந்த ஹதீஸை யாரோ பொய்யாக இட்டுக்கட்டிவிட்டார்கள் என்கிறார் இம்ரான் ஹுஸைன். 

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பாக முஸ்லிம் அறிஞர்கள் சிலரும் தடுமாற்றம் கொள்ளத்தான் செய்கின்றனர். இம்ரான் ஹுஸைன் தடுமாறியதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மற்ற அறிஞர்கள் செய்யாத அனுகுமுறையில் "குர்ஆனுக்கு முரண்படுகிறது" என்ற புது விதமான பிரச்சாரம்தான் இம்ரான் ஹுஸைனை தனிமைப்படுத்திக்காட்டுகிறது. 

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பான சர்ச்சை எந்த காலத்திலும் இருந்திருக்கவில்லை. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்ட சர்ச்சைதான் இது. 

David Samuel (Margoliouth) எனும் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் 1905 ஆம் ஆண்டு ஒரு புத்தகம் வெளியிட்டார். 

Book's name : "Mohammed and the Rise of Islam"

இந்த புத்தகத்தில்தான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது. 

"சிறுமி ஆயிஷா" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது. 

ஆறு வயது சிறுமியை திருமணம் செய்தவர் என்ற கருத்தை அழுத்தமாக பதிய வைப்பதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் மீது இருக்கும் நல்ல அபிப்பிராயம் குறையும் என கருதப்பட்டது. அப்படி நடக்கவும் செய்தது. இஸ்லாத்தை விமர்சிப்பதற்காகக் காத்திருந்தவர்களுக்கு அது விருந்தாகவும் அமைந்தது. 

"ஆறு வயது சிறுமி"யை திருமணம் செய்பவர் எத்தகைய மனிதராக இருப்பார்?! என்று கேவலமாக விமர்சிக்கப்பட்டது. 

பல நூற்றாண்டுகளாக கேவலமாக பார்க்கப்படாத ஒரு விஷயம் திடீரென கேவலமாக மாற்றப்ட்டது ஏன்? 

இதுதான் முதலில் பார்க்கப்பட வேண்டியது. இதை தெரிந்து கொள்ளாமல்தான் முஸ்லிம்களுள் சிலரே அதை கேவலமாகக் கருதி ஹதீஸை மறுக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர். 

ஆறுவயது திருமணம் கேவலமாக மாற்றப்பட்டது ஏன்? 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


Part -6
https://piraimeeran.blogspot.com/2020/07/SM6.html?m=1

Part -4

https://piraimeeran.blogspot.com/2020/07/SM4.html?m=1

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி