Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -7)

திருமணம் என்பதன் வரையறை நிர்ணயிக்கப்படாத காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் வஹியின் மூலம் படிப்படியாக சட்டம் இயற்றினார்கள். 

பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அரபுகளிடம் இஸ்லாத்தை பதிய வைத்தபின் திருமணம் தொடர்பான இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். 

** பெண்னின் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றினார்கள். 

** குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து பெண்களை அனுபவித்துவிட்டு பிரிந்து செல்லும் திருமணத்தை(نكاح المتعة‎) தடை செய்தார்கள்.

** பிரயாணத்தில் இருக்கும்போது திருமணம்செய்து பின்னர் ஊருக்கு திரும்பும்போது தலாக் சொல்லும் திருமணத்தை (نكاح المسيار‎) தடை செய்தார்கள். 

திருமணத்தில் பெண்களின் உரிமைகளில் பல புரட்சிகள் செய்த நபி(ஸல்) அவர்களை, பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மேலை நாட்டவர்கள், நபி(ஸல்)அவர்கள் ஆறுவயது சிறுமியை திருமணம் செய்தார்கள் என்று கேவலமாக விமர்சித்ததை முஸ்லிம்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

இந்நிலையில்தான், அந்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றி காதியானி மதத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து 1924 ஆம் வருடம் ஒரு புத்தகம் வெளிவந்தது. 

Book's name : "Muhammad the Prophet"

இந்த புத்தகத்தில் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயதை அதிகரிக்கும் வேலை செய்யப்பட்டிருந்தது. 

** ஜூபைர் என்பவருக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்தார்

** நபிகளாரின் மகளார் பாத்திமா(ரலி) அவர்களை விட ஐந்து வயதே இளமையானவர் ஆயிஷா(ரலி) 

போன்ற சில தகவல்களை வைத்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும் என்றும், அவருடன் நபி(ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டபோது பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும் என்றும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டது. 

காதியானிகளைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு அறிவுபூர்வமான வாதமாக பார்க்கப்பட்டாலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் இது முட்டாள்தனமான வாதமே.

இஸ்லாமிய மார்க்கத்தில் குர்ஆனுக்கு அடுத்தபடியாக இருக்கும் மார்க்க ஆதாரம் ஆதாரப்பூர்வ ஹதீஸ்கள்தான்.  அத்தகைய ஆதாரப்பூர்வ ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை குறைக்கும் விதமாக இருந்தது காதியானிகளின் செயல். 

காதியானிகளின் கருத்தை ஏற்றால், 
அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆறு வயதில் திருமணம் நடந்தது என்ற ஸஹீஹான ஹதீஸ் பொய்யாகிவிடும். 

எனவே, முஸ்லிம்களுள் சிலர் இதை வேறுவிதமாகக் கையாண்டனர். அதாவது, பத்தொன்பது (திஸ்ஸா அஸரா) என்பதை தவறுதலாக வெறும் ஒன்பது (திஸ்ஸா) என்று மட்டும் அறிவிப்பாளர் புரிந்து கொண்டு அறிவித்துவிட்டார் என்று கூறி அந்த விமர்சனத்தை எதிர்கொண்டனர். அதாவது, பத்தொன்பது வயதை வெறும் ஒன்பது வயதாக அறிவித்துவிட்டார்கள் என்று கூறியதன் மூலமாக நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை முறியடித்ததாக நினைத்தனர். 

அந்நஜாத் இதழின் ஸ்தாபகர் மறைந்த அபுஅப்துல்லாஹ் அவர்களும் இதுபோன்ற கருத்தை ஒத்தவராக இருந்து தன்னுடைய இதழிலும் இதை ஆதரித்து எழுதினார். 

//ஹிஜ்ரி 3-ம் ஆண்டில் இடம் பெற்ற உஹத் யுத்தத்தில் 15 வயதுக்கு உட்பட்ட இரண்டு இளைஞர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆயிஷா(ரழி) அவர்கள் யுத்தத்தில் காயப்பட்டோருக்குப் பணிவிடை செய்ய அனுமதிக் கப்பட்டார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 1-ல் அவரது வயது 18 என்றால் ஹிஜ்ரி 3-ல் அவரது வயது 20 என்பதில் சந்தேகமுண்டா? // (அந்நஜாத் இதழ்)

என்று கேள்வியும் எழுப்பியிருந்தார். 

ஆக, அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் திருமண வயது தொடர்பாக பல நூறு வருடங்களாக இல்லாத சந்தேகம் முஸ்லிம்களுள் சிலரிடம் சமீபத்திய ஆண்டுகளில் தலைவிரித்து ஆடியது. 

நபி(ஸல்) அவர்களை கேவலமாக பேசுகிறார்களே என்ற ஆதங்கத்தில் முஸ்லிம் சமூகத்தில் சிலர் அந்த ஹதீஸை ஓரமாக வைத்துவிட்டு,  பத்து வயதில்தான் திருமணம் நடந்தது என்றும் பதினைந்து வயதில்தான் இல்லறம் நடந்தது  என்றும் வாதிட ஆரம்பித்தனர். 

இந்நிலையில்தான் எவரும் உருட்டாத புது உருட்டை உருட்டினார் இம்ரான் ஹுஸைன். 

நபி(ஸல்) அவர்களுக்கும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் நிக்காஹ் எனும் திருமணம் நடக்கவேயில்லை என்று அடித்துக்கூறினார் இம்ரான் ஹுஸைன். 

"ஆயிஷா(ரலி) அறிவித்தார் 
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான்..." என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து இருவருக்கும் அல்லாஹ் திருமணம் செய்துவைத்து விட்ட நிலையில் மீண்டும் ஒரு திருமணம் நடக்கத்தேவையேயில்லை என்றார் இம்ரான் ஹுஸைன். 

நபி(ஸல்) அவர்களின் கனவில் ஆயிஷா(ரலி) அவர்கள் காட்டப்பட்டதே போதுமானது என்றும், திருமணம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்கிறார் இம்ரான் ஹுஸைன். 

நடக்கத்தேவையேயில்லாத திருமணம் ஆறுவயதில் நடந்ததாக சொல்லும் ஹதீஸ் பொய்யானது என்றும் கூறினார். 

ஆனால், அந்த ஹதீஸின் மீதியை பார்க்க மறந்துவிட்டார் போலும்.

"நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதை மறைத்துவிட்டார் இம்ரான் ஹுஸைன். 

இறைத்தூதர்கள் தங்களின் கனவுகளை உண்மைப்படுத்துவார்கள். தனது மகனை அறுப்பதுபோல் கனவுகண்ட நபி இபுறாஹிம்(அலை) அவர்கள் அதை உண்மைபடுத்தும் வகையில் அவரது மகனை அறுக்க முயன்றார்.

இம்ரான் ஹுஸைன் சொல்வதுபோல் இருக்க வேண்டுமானால், அல்லாஹ்தான் கனவில் அறுக்கவைத்துவிட்டானே என்று நபி இபுறாஹிம்(அலை) அவர்கள் சும்மா இருந்திருக்க வேண்டும். 

நபி(ஸல்) அவர்கள் தமது மனைவிகளுள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டு சென்ற இருவரை கூப்பிட்டு, தன்னுடைய மனையிடம்தான் பேசிக்கொண்டிருப்பதாகக்கூறி ஷைத்தானின் சந்தேக விதைக்கு முற்றுப்புள்ளி வைத்த நபி(ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்யாமல் வைத்துக்கொண்டார்கள் என்று இம்ரான் ஹுஸைன் கூறுவது நபி(ஸல்) அவர்கள் மீது கூறும் மாபெரும் அவதூறு. 

ஆறு வயதில் திருமணம் நடந்ததாக சொல்லும் ஹதீஸை உண்மை என்று நம்பினால் அதை செயல்படுத்திக்காட்ட முடியுமா என்று இம்ரான் ஹுஸைன் விடுக்கும் சவால்தான் உச்சகட்ட காமெடியே! 

** ஆறு வயது சிறுமியை திருமணம் செய்து அந்த ஹதீஸை உண்மைபடுத்த முடியுமா? 

** உங்கள் வீட்டில் இருக்கும் ஆறு வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைப்பீர்களா? 

இந்த இரண்டும் இம்ரான் ஹுஸைனின் சவால்கள். மார்க்கத்தின் அடிப்படை அறிவு 
இல்லாமல் விடப்படும் சவால்தான் இது. 

ஒரு ஹதீஸை ஸஹீஹ் (உண்மை) என்று நம்பினால் அந்த ஹதீஸை செயல்படுத்திக்காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை எவருமே கூறியதில்லை. 

நபி(ஸல்) அவர்கள் பத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்ததாக ஹதீஸ்களில் பார்க்கிறோம். அவற்றை உண்மை என்றும் நம்புகிறோம். அந்த ஹதீஸ்களை உண்மை என்று நம்புவதாக இருந்தால் நாமும் அத்தனை திருமணங்களை செய்துகாட்ட வேண்டும் என்று எவராவது கூறுவாரா? 

நமக்கு எத்தனை திருமணங்கள் செய்ய முடியும் என்பது வரையறுக்கப்பட்டுவிட்டது. அதைமீறி, நபி(ஸல்) அவர்கள் செய்ததுபோல் பத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை செய்வேன் என்று ஒருவன் கூறினால் அவன் சுன்னாவை நிறைவேற்றியவனாக ஆகமாட்டான். சுன்னாவை அழித்த பாவியாகவே பார்க்கப்படுவான். 

பருவமடைந்த பெண்ணிற்கு அவளது சம்மதத்துடன்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுவிட்ட நிலையில் பருவமடையாத ஆறுவயது
பெண்னை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ததுபோல் ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்ய முடியுமா என்று இம்ரான் ஹுஸைன் சவால் விடுவது முட்டாள்தனத்தின் உச்சகட்டம். 

முதன்முதலில் மாதவிலக்கு உண்டாவதுதான்
ஒரு பெண் பருவமடைவதற்கான அடையாளம் என்று கருதப்படும் நிலையில், மாதவிலக்கு ஏற்படாத பெண்களுக்கும் இத்தா காலம் மூன்று மாதங்கள் என்று குர்ஆன் வசனம் (65:4) கூறுகிறதே! 

அப்படியென்றால், பருமடையாத பெண்களுக்கும் இத்தா காலம் இருப்பதாக அல்லவா அந்த வசனம் கூறுகிறது. இத்தா என்பது திருமண முறிவு அல்லது கனவன் இறந்துவிட்ட நிலையில் பெண்கள் காத்திருக்கும் காலம் அல்லவா!

எனில், பருவமடையாத பெண்களும் அக்காலத்தில் மணமுடிக்கப்பட்டிருந்தனர் என்பது குர்ஆனிலேயே ஆதாரமாக இருக்கும்போது, ஹராமான திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் செய்வார்களா என்று இம்ரான் ஹுஸைன் கூப்பாடு போடுவது ஏன்? 

"போதையுடன் தொழுகைக்கு நெருங்காதீர்கள்" (4:43) என்ற வசனம் குர்ஆனில் இருக்கிறது. போதையுடன் தொழுவது அப்போது தடை செய்யப்பட்டிருக்கவில்லை என்று நாம் புரிந்து கொள்வதுபோல் பருவமடையாத பெண்களுக்கும் திருமணம் செய்யப்பட்டு அவர்களுக்கு இத்தாவும் இருந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள இடமிருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல் "குரானுக்கு முரண்படுகிறது" என்று இம்ரான் ஹுஸைன் ஒப்பாரி வைப்பது தேவையற்றது. 

இதுதான் இம்ரான் ஹுஸைன் குர்ஆனை அனுகும் மெத்தடாலஜி (Methodology). 

அவருடைய மெத்தடாலஜி தவறானது. இம்ரான் ஹுஸைனின் அந்த தவறான மெத்தடாலஜியை போற்றிப் புகழும் சூப்பர் முஸ்லிம் சேனல் தவறான கருத்தை பரப்புகிறது. 

இம்ரானின் இரண்டாவது சேட்டையைப் பார்ப்போம்...

ஷியா முஸ்லிம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஷியாக்களும்  முஸ்லிம்கள்தான் என்று கூறி அதை நிறுவ இம்ரான் ஹுஸைன் முன்வைக்கும் வாதத்தை பார்ப்போம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Part -8
https://piraimeeran.blogspot.com/2020/07/SM8.html?m=1



Part -6
https://piraimeeran.blogspot.com/2020/07/SM6.html?m=1



Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி