Skip to main content

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -9)

சூப்பர் முஸ்லிம்...

கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு சமீபத்தில் பரிட்சியமான பெயர் இது. 

சூப்பர் முஸ்லிம் என்ற பெயரில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு யுடியூப் சேனல் (Youtube channel) தொடங்கப்பட்டிருக்கிறது. 

பொதுவாக யுடியூப் சேனல் நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதை மக்களிடம் பிரபல்யப்படுத்துவது சாதாரணமான விஷயமல்ல. ஆனால், தொடங்கிய குறுகிய காலத்திலேயே சூப்பர் முஸ்லிம் சேனல் அதிகப்படியான பயனாளர்களை தன்னுடன் இனைத்துக்கொண்டுள்ளது. 

உன்னுடைய கொள்கை சூப்பரா? என்னுடைய கொள்கை சூப்பரா? என்ற பட்டிமன்றத்தை நடத்திய கொள்கைவாதிகள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் ஓய்ந்திருந்த நேரத்தில்தான் "சூப்பர் முஸ்லிம்"  யுடியூப் சேனல் வெளிவந்தது. 

தொழுகை, ஜக்காத், ஹதீஸ்கலை, பிறை மற்றும் சூனியம் என பல விஷயங்களையும் பிரித்து மேய்ந்துவிட்டு தவ்ஹீத்வாதிகள் மற்றும் ஸலபுகள் ஓய்வாக இருந்த நேரம் அது. 

தவ்ஹீத் ஜமாத் மூன்றாக பிரிந்து அவர்களுக்குள் நிகழ்ந்த கொடுக்கல் வாங்கல் தகறாறுகள் தளர்ந்து அமைதியான நேரம் அது. 

பழைய விஷயங்கள் அனைத்தும் புளித்துப்போய் போரடித்து இருந்த நேரத்தில்தான் புது விஷயமாக சூப்பர் முஸ்லிம் சேனல் வெளிவந்தது. 

சூப்பர் மேன் எனும் காமிக்ஸ் கதையில் வரும் "S" என்ற லோகோவை  (Logo) பயன்படுத்தி சூப்பர் முஸ்லிம் சேனல் அதிரடியைக் கிளப்பியது. 

கியாமத்நாளின் அடையாளம் என்று சொல்லப்படும் யஃஜூஜ் மஃஜூஜ் எனும் கூட்டத்தார் கியாமத்நாளின் நெருக்கத்தில் வருவார்கள் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்த நிலையில், அந்த கூட்டத்தார் ஏற்கனவே வந்துவிட்டார்கள் எனவும் இன்னும் சில ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றும் ஒரு நெருப்பை பற்றவைத்தது அந்த சேனல். 

அவ்ளோதான், புது விஷயத்துக்காக காத்திருந்த இனைய முஸ்லிம்களுக்கு உற்சாகம் பீறிட்டது. அந்த புது மேட்டரை லைக் செய்ய ஆரம்பித்தனர். இன்னும் மேட்டரை தெரிந்து கொள்வதற்காக அந்த யுடியூப் சேனலையும் சப்ஸ்கிரைப் செய்தனர். குறுகிய காலத்திலேயே அந்த சேனல் பனிரெண்டாயிரம் பயனாளர்களை கடந்தது. 

இந்த நிலையில்தான், தமிழகத்தின் ஏகத்துவ ஜோதியில் முக்கிய பங்காற்றி, சொல்வதற்கே வாய் கூசும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு, பின்னாளில் அதை மறுத்து தன்னிடம் விவாதிக்க எவரும் உண்டா என்று விவாதமேடைக்கு ஆள் தேடிக்கொண்டிருந்த புரட்சி நாயகரின் பார்வையில் பட்டது சூப்பர் முஸ்லிம் சேனல். 

அவருக்கு அது சப்பையான மேட்டர்தான் என்றாலும் அதையே வைத்து சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் சூப்பர் முஸ்லிம் சேனல் தீண்டப்பட்டது. அதன் விளைவாக சேனலின் ரசிகர்கள் அதிகமாகினர். 

சூனிய விஷயத்தில் நிறைய பதிலடி கொடுத்து ஓய்வாக இருந்த இலங்கையைச் சேர்ந்த ஸலபி ஒருவர் சூப்பர் முஸ்லிம் சேனலுக்கு பதில் கொடுக்க முனைந்ததன் விளைவாக அந்த சேனல் விண்முட்ட உயரத்தொடங்கியது. 

சூப்பர்மேன் லோகோவை மாற்றிவிட்டு கழுகுபறக்கும் லோகோவை வைத்து தான் உயரப்பரப்பதை உணர்த்த ஆரம்பித்தது சூப்பர் முஸ்லிம் சேனல். 

தற்போது சுமார் ஐம்பதினாயிரம் பயனாளர்களை நோக்கி வீறுநடை போடுகிறது. 

தனது குருநாதர் இம்ரான் ஹுஸைனின் பேச்சை டப்பிங் செய்து வெளியிடும் சூப்பர் முஸ்லிம் சேனல் குருநாதரின் சேனலை மிஞ்சிவிடுவதற்கு தமிழ்பேசும் ஏகத்துவ/ஸலபி முஸ்லிம்கள் பெரும்பங்காற்றுகின்றனர். 

தமிழ்பேசும் முஸ்லிம்களிடத்தில் பல அனாச்சாரங்களை இறக்குமதி செய்த உருது மொழி முஸ்லிம்களின் நவீன அனாச்சாரம்தான் 'சூப்பர் முஸ்லிம் யூடியூப் சேனல்'. 

அல்லாமா இக்பால்
மௌலானா மௌதூதி
இஸ்ரார் அஹ்மது
இம்ரான் ஹுஸைன் 

என உருது மொழியில் கிளப்பிவிடப்பட்ட குழப்பங்கள் சமீபத்தில்தான் தமிழில் சூப்பர் முஸ்லிம் மூலம் டப்பிங் ஆகியுள்ளன.

ஜெகபர் சாதிக் அவர்களின் பெயரால் பூரியான் பாத்திஹா ஓதப்படுவதைப்போல், இம்ரான் ஹுஸைன் பெயரில் "வீடியோ பாத்திஹா" ஓதுகிறது சூப்பர் முஸ்லிம் சேனல். 

இம்ரான் ஹுஸைனின் கருத்துக்களுக்கு "கத்தம் பாத்திஹா" ஓதிவிட்டால் சூப்பர் முஸ்லிம் சேனலின் கருத்துக்களுக்கும் முடிவுரை எழுதப்பட்டுவிடும். 

இம்ரான் ஹுஸைனுக்கு பல்வேறு தலைப்புகளில் கத்தம் பாத்திஹா ஓதுவோம். இன்ஷா அல்லாஹ்.

Part -8
https://piraimeeran.blogspot.com/2020/07/SM8.html?m=1

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி