Skip to main content

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -2)

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -2)

முதலில் ஸம்ஸம் தொடர்பான சுருக்கமான வரலாற்றில் இருந்து தொடங்குவோம்...

இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள் இறை கட்டளையின்படி அவரது மனைவி ஹாஜர்(அலை) மற்றும் குழந்தை இஸ்மாயில்(அலை) ஆகியோரை மக்காவின் பாலைவனத்தில் விட்டுவிட்டு போய்விடுகிறார். மனித குடியிருப்புகளோ நீர்நிலைகளோ இல்லாத அந்த பள்ளத்தாக்குப் பகுதியில் அக்குழந்தை பசியாலும் தாகத்தாலும் அழுதபோது உருவான நீரூற்றுதான் ஸம்ஸம் கிணறு. வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் அங்கே தோன்றி அவரது கால்களினால் நிலத்தில் அடித்ததால் ஸம்ஸம் உருவானது என்றும், குழந்தை இஸ்மாயில்(அலை) அவர்கள் அழுத நிலையில் கால்களால் தரையில் அடித்தபோது ஸம்ஸம் உருவானது என்றும் வெவ்வேறு விதத்தில் சொல்லப்பட்டாலும் ஸம்ஸம் நீரூற்று தோன்றிய விதம் அற்புதம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மனித அரவமற்ற அந்த பள்ளத்தாக்கில் உருவான ஸம்ஸம் நீரூற்றின் காரணமாக மனித குடியிருப்பு தொடங்குகிறது. அந்த நீரூற்று கிணறாக மாற்றப்படுகிறது. இனக்குழுக்களின் மோதல் காரணமாக அங்கு சன்டைகள் பல நடந்த நிலையில் ஸம்ஸம் கிணறு கவனிப்பாரற்று போகிறது. மக்களின் அநீதி காரணமாக கிணற்று நீரை பூமி இழுத்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியாகினும் நீர் இல்லாத நிலையில் அந்த கிணறு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஸம்ஸம் கிணற்றின் அடையாளமே மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அந்த கிணறு நபிகளாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களால் மீண்டும் புணரமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கிணற்றை மீட்கும்போது அதிலிருந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் அப்துல் முத்தலிப் வசமாகியிருக்கிறது. மேலும், கிணற்றின் மீதான உரிமையும் அவரிடமே இருந்திருக்கிறது. பின்னர், அவரது மகனும் நபிகளாரின் சிறிய தந்தையுமான  அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்திருக்கிறது. ஹஜ் பிரயாணிகளுக்கு ஸம்ஸம் நீரை வழங்கும் பொறுப்பு இவரிடம் இருந்திருக்கிறது. ஸம்ஸம் கிணற்றருகில் அதன் நீரை குடிப்பதற்கும் உளூச் செய்வதற்கும் மட்டும் பயன்படுத்தும் வகையில் இவர் மாற்றம் செய்திருக்கிறார். (இவருடைய மகன் அப்துல்லா அவர்கள்தான் இப்னு அப்பாஸ்(ரலி) என்று அழைக்கப்படுகிறார்).

அப்பாஸிய கிலாபத் ஆட்சியின்போது ஸம்ஸம் கிணற்றருகில் தண்ணீர் குடிக்குமிடம் ஒன்றை அமைத்து அதற்கு 'நீரருந்தும் இல்லம்' (بيت الشراب‎) என்றும் பெயரிட்டிருந்தனர். ஸம்ஸம் நீரில் உளூச் செய்வதற்கு ஸம்ஸம் கிணற்றருகில் தனியாக தடாகம் அமைக்கப்படிருந்திருக்கிறது.

அப்பாஸிய கிலாபத்தின் ஆட்சியாளர்கள் சார்பாக ஸம்ஸம் கிணற்றில் இருந்து நீர் விநியோகிக்கும் பிரதிநிதியாக ஸுபைர் குடும்பத்தார் இருந்தனர். அப்பாஸிய ஆட்சி முடிந்தபிறகு மக்கா மற்றும் மதீனாவின் கட்டுப்பாடு உஸ்மானியப் பேரரசு (Ottoman empire) வசம் போனது. ஸம்ஸம் கிணறும் உஸ்மானியப் பேரரசின் பொறுப்பில் வந்தது. எனினும், ஸம்ஸம் கிணற்றில் இருந்து நீர் விநியோகிக்கும் பொறுப்பு ஸுபைர் குடும்பத்தாரிடமே உறுதி செய்யப்பட்டது.

உஸ்மானிய பேரரசின் காலத்தில் ஸம்ஸம் கிணற்றைச் சுற்றிலும் இரும்பினால் ஆன அடைப்பின் மூலம் அது அழகுபடுத்தப்பட்டது. ஸம்ஸம் கிணற்றிற்கு மேற்கோபுரம் (Dome) அமைத்தும் அழகுபடுத்தப்பட்டது.

1925 க்குப் பிறகு
மக்கா மற்றும் மதினா ஆகிய இரு புனிததலங்களின் கட்டுப்பாடும்
சவூத் குடும்பத்தினரின் கைகளுக்கு மாறியது. அதன் தொடர்ச்சியாக அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிக அளவில் ஹாஜிகள் வந்தாலும் அவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் கிரியைகளை செய்யும் வகையில் கட்டமைப்பு தொடங்கப்பட்டது. தவாப் செய்யும் பாதையை விஸ்தரிக்கும் பணி தொடங்கியது. காபா எனும் கட்டிடத்தை வலம் வரும் வட்டப்பாதையை (Mataf) அதிகப்படுத்தியது சவுதி. அந்த பாதையில் இடைஞ்சலாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நான்கு மத்ஹபுகளுக்கும் தனித்தனியாக தொழுகை நடத்தப்பட்ட கட்டிடங்கள் (Maqamat) மற்றும் ஸம்ஸம் கிணற்றின் கட்டிடமும் இடிக்கப்பட்டன.

1955 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்டம் ஒன்றைத் தீட்டி அதனடிப்படையில் விஸ்தரிப்பு பணிகள் மக்காவில் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அதுகாலம் வரையிலும் கயிற்றில் கட்டப்பட்ட பித்தளை வாளி மூலம் ஸம்ஸம் கிணற்றில் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டிருந்தது  முடிவுக்கு வந்தது. 1964 ஆம் ஆண்டிலிருந்து மோட்டார் பம்ப் முலம் ஸம்ஸம் கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டது. ஸம்ஸம் கிணற்றைச் சுற்றிலும் கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்டடு அந்த கிணறு மக்களின் பார்வையிலேயே இருந்தது. தவாப் தளம் விஸ்தரிக்கப்பட்டபோது ஸம்ஸம் கிணற்றின் உயரம் சுமார் 9 அடிகள் குறைக்கப்பட்டு கிணற்றிற்கு மேலாக தளம் அமைக்கப்பட்டு கீழ்தளத்தில் ஸம்ஸம் கிணறு பார்வையில் இருந்தது. ஸுபைர் குடும்பத்தார் ஸம்ஸம் நீரை சுமந்து சென்று விநியோகித்துக்கொண்டிருந்த முறை 1982 ஆம் ஆண்டு முடிவுக்கு  வந்தது. ஸம்ஸம் நீரை விநியோகித்த அனைவரையும் சேர்த்து Zamazemah United Office என்ற பெயரில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு இவர்களின் நிர்வாகத்தின்கீழ்
மஸ்ஜிதுல் ஹரம் முழுவதும் குழாய் மூலம் ஸம்ஸம் நீர் விநியோகிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஸம்ஸம் கிணறு மக்களின் பார்வையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

இவை, ஸம்ஸம் கிணற்றின் சுருக்கமான வரலாறு.

இனி, நம்பிக்கைக்கும் அறிவியலுக்குமிடையில் ஸம்ஸம் கிணறு படும்பாட்டை பார்ப்போம்...

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி