Skip to main content

*அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part-2)

 *அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part-2)

தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் சார்ந்தவற்றை எப்படி அழைப்பது? 

வானுலக நம்பிக்கையான தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் அஃறிணையாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், இவை மனிதனை விட அதிக ஆற்றல் பெற்றவையாக கருதப்படுகிறது. 

மனிதரல்லாத மேல் திணை நம்பிக்கைகளை தனியாக அடையாளப்படுத்த வார்த்தையில்லை. இருப்பதைக் கொண்டுதான் அழைக்க முடியும். 

மனிதரை விட தாழ்நிலையிலுள்ளவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'அது' எனும் அஃறிணைச் சொல்லை பயன்படுத்த முடியாது. மனிதரை குறிப்பிட பயன்படுத்தும் 'அவன் & அவள்' எனும் உயர்திணையைத்தான் கொடுக்க வேண்டும்.

அப்படித்தான் கற்பிக்கப்படுகிறது.

** தேவதை(Angel) என்பது பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது.

** அசுரர்(satan) என்பதும் பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது. 

இவை, ஆண்பாலில் அழைக்கப்பட்டாலும் பெண்பாலில் அழைக்கப்பட்டாலும் மனிதரை அழைப்பது போன்ற விதத்திலானது அல்ல. மனிதரை விட சற்று மேலான திணையாக கருதலாம்.

¶¶ மனிதரை 'அவன் & அவள்' என்று அழைப்பது உயர்திணை. 

¶¶ மனிதர் அல்லாதவற்றை 'அவன் & அவள்' என்று அழைப்பது அஃறிணை. 

¶¶ மனிதரல்லாத அதே நேரத்தில் மனிதரைவிட மேலான நிலையிலுள்ளவற்றை 'அவன் & அவள்' என்று அழைப்பதை 'மேல் திணை' என்று தனியாக ஒரு திணையாக உயர்த்தலாம். 

இவை அல்லாத உச்சபட்ச திணை ஒன்றையும் நாம் அடையாளப்படுத்த முடியும். அதுதான் கடவுளின் பாலினத்தை அடையாளப்படுத்தும் 'உச்ச திணை'

கடவுளை உச்சபட்சமான திணை கொண்டு அழைக்க வேண்டும்.

ஆனால் உலக மொழிகளுள் இருப்பதோ மனிதரை அடையாளப்படுத்தும் உயர்திணை வார்த்தைகளான 'அவன் அவள்' மட்டுமே. 

விக்கிரக வழிபாடு செய்பவர்கள் கடவுளை உருவகப்படுத்துவதால் அவர்கள் கொடுக்கும் உருவத்திற்கேற்ப தங்களின் கடவுள்களை ஆண்பாலிலோ அல்லது பெண்பாலிலோ அழைத்துக்கொள்கின்றனர். 

கடவுளை உருவகப்படுத்தாதவர்கள் கடவுள் எனும் அதிசக்திக்கு பெண்பால் வார்த்தையை கொடுப்பதில்லை. ஆண்பால் வார்த்தையையே கடவுளுக்கு கொடுக்கின்றனர். 

ஹுப்ரு மொழியில் கடவுள் (אלוהים)

பிரெஞ்ச் மொழியில் கடவுள் (Dieu)

அரபு மொழியில் கடவுள் (اللَّهُ)

இவை அனைத்தும் 'அவன்' எனும் ஆண்பால் பிரதிபெயர் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறது. 

ஹீப்ரு 'அவன்' (הוא)

பிரெஞ்ச் 'அவன்' (il)

அரபு 'அவன்' (هُوَ)

அரபு கலாச்சாரத்தில் பல கடவுள் கொள்கை இருந்தாலும் உச்சபட்ச கடவுளாக அவர்கள் கருதிய உருவம்கொடுக்கப்படாத அல்லாஹ் எனும் கடவுளுக்கு அரபுகள் 'அவன்' (هُوَ) எனும் பிரதிபெயரைத்தான் கொடுத்திருந்தனர். 

கடவுளுக்கு உருவம் கற்பிக்காத  இப்றாஹிமிய மதங்களின் வேத நூல்கள் கடவுளை ஆண்பாலில்தான் அடையாளப்படுத்துகின்றன. இப்றாஹீமின் மதங்களின் கடவுள் ஒன்றே. அந்த கடவுளை 'அவன்' எனும் ஆண்பால் பிரதிபெயரினால்தான் யூத கிறிஸ்தவ இஸ்லாமிய வேதபுத்தகங்கள் அடையாளப்படுத்துகின்றன. 

அரபு மக்களின் மொழியில் இறக்கப்பட்ட வேதமான குர்ஆனிலும்  மக்கள் புழங்கிய 'அவன்' (هُوَ) எனும் ஆண்பால் பிரதிபெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. குர்ஆனில் அல்லாஹ்விற்கு தனியாக அரபு இலக்கணம் படைக்கவில்லை. மக்கள் பயன்படுத்தி வந்த இலக்கணத்திலேயே அல்லாஹ்விற்கும் இலக்கணத்தை கூறியது. 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

(திருக்குர்ஆன்  112:1)

அல்லாஹ்வாகிய கடவுளைப் பற்றி பேசும்போது 'ஹுவ'(هُوَ) எனும் ஆண்பால் பிரதிபெயரை பயன்படுத்துகிறது குர்ஆன். 

அல்லாஹ்விற்கு ஆண்பால் இலக்கணம் கொடுக்கப்படுவதால் அல்லாஹ் ஆணா பெண்ணா என்ற பட்டிமன்றத்தை நடத்துகிறது மேற்குலம். இதற்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு அல்லாஹ் ஆணுமில்லை பெண்ணுமில்லை என்று சிலர்  கூறும்போது, அப்பெடியென்றால் மூன்றாம் பாலினமா? என்று கேலி செய்கிறது மேற்குலகம். 

அரபு மொழியில் சூரியனை பெண்பாலிலும் சந்திரனை ஆண்பாலிலும் அழைக்கும்போது இதே கேள்வியை ஏன் கேட்பதில்லை? 

சூரியன் ஆணா? அல்லது பெண்ணா? என்று ஏன் கேட்பதில்லை!

சூரியன் ஆணுமில்லை! பெண்ணுமில்லை! என்று சொன்னால் அது மூன்றாம் பாலினமா? என்று ஏன் கேட்பதில்லை!

சூரியன் எனும் அஃறிணையை அழைக்க அரபு மொழியில் தனி வார்த்தையில்லாததால் பெண்பால் வார்த்தையில் அழைக்கிறார்களே தவிர அது ஒரு பெண்ணை அழைப்பது போன்ற அர்த்தத்தில் அப்படி அழைக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்லாஹ்வை அழைப்பதற்கான 'உச்ச திணை' மொழிகளில் இல்லாத நிலையில் அரபுகள் பயன்படுத்திய ஹுவ எனும் உயர்திணையை பயன்படுத்தி அல்லாஹ்வைப் பற்றி விவரிக்கும்போது அது ஆண்மகனாக மேற்குலகின் கண்களுக்குத் தெரிகிறது என்றால் பிரச்சினை மொழியில் இல்லை. மொழியைப் பற்றின போதிய அறிவில்லாத மேற்குலகத்தினரின் அறியாமைதான் பிரச்சினை.

¶¶ மனிதரை அடையாளப்படுத்தும் 'அவன் & அவள்' என்பது உயர்திணை. 

¶¶ மனிதரல்லாதவற்றை அடையாளப்படுத்தும் 'அவன் & அவள்' என்பது அஃறிணை. 

¶¶ மனிதரல்லாத அதே நேரத்தில் மனிதரைவிட மேலான நிலையிலுள்ளவரை அடையாளப்படுத்தும் 'அவன் & அவள்' என்பது 'மேல் திணை'

¶¶ மனிதரையும் உலகத்தையும் படைத்ததாக முஸ்லிம்கள் நம்பும் அல்லாஹ்வை அடையாளப்படுத்தும்

'அவன்' என்பது 'உச்ச திணை'

ரைட். இதுவரையிலும் அல்லாஹ்விற்கு கொடுக்கப்படும் ஆண்பால் அடையாளத்தின் மீதான மேற்குலகின் விமர்சனத்திற்கு விரிவான பதில் பார்த்தோம். 

இனிமேல் பார்க்கப்போவது அல்லாஹ்வை 'அவர்' என்று ஏன்  மரியாதையாக அழைப்பதில்லை என்பதைத்தான்...

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான். 





Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி