Skip to main content

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -1)

 

*ஸலப் - வரலாற்றுப் பார்வை*
(Part -1)

ஸலபு கொள்கையையின் வரலாறை வரலாற்றின் துனை கொண்டு பார்ப்போம்...

ஸலப் கொள்கையின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது?

உதாரணமாக, தமிழுலகில் தவ்ஹீத் எழுச்சி எப்போது தொடங்கியது என்று கேட்டால் அது 80 களில் தொடங்கியதாக சொல்வோம் (1980). இந்த காலகட்டத்திலிருந்து வரலாற்றில் தேடுதலை துவங்கினால் தவ்ஹீத் எழுச்சியின் வரலாற்றை நாம் பார்க்க முடியும். இதுபோல, ஸலபு கொள்கையின் எழுச்சி எப்போது ஏற்பட்டது என்பதை வரலாற்றில் தேடுவோம்.

ஸலபு கொள்கையின் எழுச்சியை வரலாற்றில் இரண்டாகப் பிரிக்க முடியும்.

** சவுதி அரேபியா என்ற நாடு உருவானதற்குப் பிறகு எழுச்சி பெற்ற ஸலபு கொள்கை

** சவுதி அரேபியா என்ற நாடு உருவாவதற்கு முன்பாக எழுச்சி பெற்ற ஸலபு கொள்கை

என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏனென்றால், சவுதி அரேபியா என்ற நாடு உருவாவதற்கு முன்பு இருந்த ஸலபுக் கொள்கை என்பது இப்போது இருப்பது போன்று மென்மையானது அல்ல. ரோஜாச் செடியில் முள் இருப்பதுபோல் அப்போது இருந்த ஸலபுக் கொள்கையில் சில கசப்புகளும் இருக்கத்தான் செய்தன. கறுப்புப் பக்கங்கள் நிறைந்த அந்த  வரலாற்றில் விரும்பத்தகாத கறுப்பு பக்கங்களை தவிர்த்து விட்டு நமக்குத் தேவையானதை மட்டும் பார்ப்போம்.

சவுதி அரேபியா என்ற நாடு 1932 ஆம் ஆண்டுதான் உருவாகிறது. ஆனால், இது  உருவாவதற்கு சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸலபு சிந்தனை தொடங்கிவிட்டது.

1300 ஆம் வருடத்தில் வாழ்ந்த இப்னு தைமிய்யா அவர்கள் அவருடைய காலத்தில் மண்டிக்கிடந்த அறியாமைகளை களைந்திருக்கிறார். கப்று ஜியாரத் போன்றவற்றை விமர்சித்திருக்கிறார். தக்லீத் எனும் கண்மூடித்தனமான பின்பற்றுதலை எதிர்த்திருக்கிறார். முன்னோர்களின் பார்வையில் குர்ஆன் சுன்னாவை அனுக வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக துவக்கி வைத்தவர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஸலபு கொள்கையின் தோற்றம் இப்னு தைமிய்யா அவர்களிடமிருந்து தொடங்குகிறது. இது வெகுஜன மக்களிடம் பிரச்சார இயக்கமாக (Movement) மாற்றப்பட்டது 1700 ஆம் வருடத்திற்குப் பிறகுதான்.

1703 ஆம் வருடத்தில் பிறந்த குதுப்தீன் அஹமது மற்றும் முஹம்மது எனும் இருவருடைய வரலாற்றில் இருந்து ஸலபு கொள்கையின் பிரச்சாரம் தொடங்குகிறது. இவர்களின் பெயரை வெறுமனே சொன்னால் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இவர்களின் அடையாளப் பெயரைச் சொன்னால்தான் இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

குதுப்தீன் அஹமது என்பவரின் அடையாளப் பெயர் 'ஷா வலியுல்லாஹ் தெஹ்லாவி' (Shah Waliullah Dehlawi) என்பதாகும். இவர் டெல்லியில் (இந்தியா) பிறந்தவர்.

இன்னொருவவர் முஹம்மது.

இவருடைய பெயரைச் சொன்னால் எவருக்கும் தெரியாது. ஆனால், இவருடைய தகப்பனாரின் பெயரைச் சொன்னால் எல்லோருக்கும் தெரிந்துவிடும். அப்துல் வஹ்ஹாப் (Abdul wahhab) என்பவரின் மகன்தான் இந்த முஹம்மது. இவர் இவருடைய தகப்பனார் பெயராலேயே வஹ்ஹாப் என்றே அறியப்படுகிறார். அரேபியாவில் பிறந்தவர் இவர். இவரை முஹம்மது என்ற அவருடைய பெயரால் அழைத்தால் நமக்கே குழப்பம் வரத்தான் செய்யும். அதனால் நாமும் அவருடைய தந்தை பெயராலேயே வஹ்ஹாப் என்றே அழைப்போம்.

சூபியிஸம் உச்சம் பெற்றிருந்த காலகட்டம் அது. மூடநம்பிக்கைகளும் அநாச்சாரங்களும் மலிந்து கிடந்த அந்த காலகட்டத்தில் இந்த இருவரின் கல்வித்தேடலும் அதிகரித்து மதீனாவில் வந்து நிறைவு பெறுகிறது. இப்னு தைமிய்யா (Ibn Taymiyyah) அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதில் இருந்து ஸலபு கொள்கை எழுச்சி பெறுகிறது.

இவருடைய புத்தகங்களைப் படித்ததில் இருந்து ஸலபு கொள்கையின் எழுச்சி அரபு தீபகற்பத்திலும் இந்திய துனைகண்டத்திலும் 1730 வாக்கில் தொடங்கியது.

குர்ஆன் மற்றும் ஹதீஸை
மத்ஹப் வழியிலும், தரீக்கா வழியிலும் இருந்து கண்மூடித்தனமாக தக்லீத் செய்து பின்பற்றுவதை விமர்சித்தனர்.

குர்ஆன் மற்றும் சுன்னாவின் கருத்து எதுவோ அது மத்ஹப்களுக்கு மாற்றமாக இருந்தாலும்
அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று ஷா வலியுல்லாஹ் பிரச்சாரம் செய்தார். குர்ஆன் வசனங்களின் விளக்கத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குர்ஆனை பாரசீக மொழியில் மொழிபெயர்த்து கொடுத்தார்.

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் ஸலபு ஸாலிஹீன்களின் வழியில் பின்பற்றுவதுதான் 'ஸலபு கொள்கை' என்பதன் விளக்கம்.

ஸலபு கொள்கையானது இந்திய துனைக்கண்டத்தில் 'அஹ்லே ஹதீத்' என்ற பெயரில் எழுச்சியாக தொடர்ந்தது.

ஆனால், அரபு தீபகற்பத்தில் ஸலபு கொள்கையின் புரட்சியை ஏற்படுத்திய வஹ்ஹாப் அவர்களின் பெயருடன் இணைக்கப்பட்டு 'வஹ்ஹாபியிஸம்' என்றே அழைக்கப்பட்டது. இன்றும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் வஹ்ஹாப் அவர்களின் பிடிவாதமான அனுகுமுறை. அந்த அனுகுமுறைக்கு காரணம் அப்போது மண்டிக்கிடந்த அநாச்சாரங்கள்.

அல்லாஹ்விடம் கையேந்திவிட்டு அவ்லியாக்களிடமும் கையேந்துவது, கப்றுகளை உயர்த்திக் கட்டி அலங்கரிப்பது, வேண்டுதல் செய்து துணியில் முடிந்து புனித மரங்களில் கட்டி விடுவது, இசை கூத்து கும்மாளம் விபச்சாரம் என மார்க்கத்தை கேலிக்கூத்தாக்குவது போன்ற அநாச்சாரங்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால், இவருடைய தந்தை உயிருடன் இருந்த வரைக்கும் இவரால் பகிரங்க பிரச்சாரம் செய்ய முடியவில்லை. 1740 ஆம் ஆண்டு இவருடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு யுயைனா (Uyayna) எனும் பகுதியின் ஆட்சியாளருடன் இணைந்து தவ்ஹீத் புரட்சியை தொடங்கினார்.

புனித மரங்களின் கிளைகளை கோடாலியால் வெட்டித் தள்ளினார். உமர்(ரலி) அவர்களின் சகோதரரின் கல்லறையில் எழுப்பப்பட்டிருந்த கோபுரத்தை மக்களை திரட்டி உடைத்தார். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணிற்கு கல்லெறி தண்டனை நிறைவேற்றினார். இவற்றையெல்லாம் அனுமதித்த ஆட்சியாளர், வரி (Tax) தொடர்பான
வஹ்ஹாப் அவர்களின்  கருத்தை ஏற்க மறுத்தார். ஜக்காத் தவிர்த்து வேறு எந்த வரியையும் விதிக்கக்கூடாது என்பது வஹ்ஹாப் அவர்களின் கருத்து. அந்த கூற்றை ஏற்க மறுத்த ஆட்சியாளர்,
அருகாமையில் இருந்த சக ஆட்சியாளர் கொடுத்த எச்சரிக்கைக்கிணங்க வஹ்ஹாப் அவர்களை தமது பகுதியை விட்டு வெளியேற்றினார். வஹ்ஹாப் அவர்கள் அப்போது தஞ்சமடைந்த இடம்தான் திரியா (Diriyah). அந்த பகுதியை ஆட்சி செய்தவர்தான் இப்னு சவூத் (Ibn saud).

தம்மை பாதுகாத்துக்கொள்ளவும், தவ்ஹீத் பிரச்சாரத்தை தொடர்வதற்கும் அரசியல் ரீதியிலான பாதுகாப்பு தேவை என்பதை உணர்ந்து, திரியா எனும் பகுதியின் ஆட்சியாளராக இருந்த இப்னு சவூத் அவர்களிடம் அடைக்கலம் தேடினார். இருவருக்கும் ஏற்பட்ட பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் தவ்ஹீத் முழக்கத்தை தொடர்ந்தார் வஹ்ஹாப். ஒருகட்டத்தில், மன்னர் இப்னு சவூத் அவர்களின் மகனான அப்துல் அஜீஸ் என்பவருக்கு தமது மகளை திருமணம் செய்து கொடுக்கிறார். இதன் மூலம் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய உறவு ஏற்படுகிறது.

இதன் பிறகு, சவூத் எனும் அந்த ஆட்சியாளரின் வாரிசுகள் அதிகாரம் செலுத்துபவர்களாவும், வஹ்ஹாப் அவர்களின் வாரிசுகள் ஆட்சியாளர்களுக்கு மார்க்க ஆலோசனை வழங்குபவர்களாவும் தொடர்ந்தனர்.

அதாவது, சவூத் குடும்பம் அமீர்களாக இருந்தனர். வஹ்ஹாப் குடும்பம் அமீர்களின் ஆலீம்களாக தொடர்ந்தனர்.

அப்துல் வஹ்ஹாப் அவர்களின் தவ்ஹீத் பிரச்சாரம் தங்குதடையின்றி தொடர்கிறது. அவருக்கு ஆதரவாளர்கள் பெருகுகின்றனர். தவ்ஹீத் முழக்கம் செய்த வஹ்ஹாப் ஆதரவாளர்கள் தங்களை தவ்ஹீத்வாதிகள் (முவஹ்ஹிதூன் -الموحدون) என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், இவர்களை 'வஹ்ஹாபி' என்றே எதிர்தரப்பினர் அழைத்தனர். இதுவே நிலைத்த பெயராகவும் ஆகிவிட்டது.

ஏகத்துவ முழக்கத்தை வஹ்ஹாப் எனும் நபருடன் மட்டும் இணைத்து பேசப்பட்டதற்குக்காரணம் வஹ்ஹாப் அவர்களின் பத்வா. தவ்ஹீதை ஏற்காதவர்கள் முஷ்ரிக் என்று தீர்ப்பளித்து அவர்களை காபிர் என்று அறிவித்து அவர்கள் தவ்ஹீதை ஏற்கும் வரையிலும் அவர்களுடன் சன்டையும் (ஜிஹாத்) செய்யலாம் என்று அவர் கொடுத்த தீர்ப்புதான் வஹ்ஹாப் அவர்கள் போதித்த ஏகத்துவம் அவருடைய பெயராலேயே சுருக்கப்பட்டு அழைக்கப்படுவதற்கான காரணம்.

பொதுவாக மன்னர்கள் நாடுபிடிக்கும் ஆசை கொண்டிருப்பவர்கள். வஹ்ஹாப் அவர்களின் இந்த காபிர் பத்வாவை சவூத் குடும்பத்தினர் தங்களின் ஆட்சி எல்லையை விரிவடைவதற்கு பயன்படுத்திக்கொண்டனர்.  தவ்ஹீதை ஏற்காதவர்கள் காபிர் என்று வஹ்ஹாப் அவர்களால் கொடுக்கப்பட்ட பத்வா ஆட்சியாளர்களுக்கு உதவியது.  அருகாமையில் இருக்கும் பிற முஸ்லிம் ஆட்சியாளர்கள் மீது போர் தொடுத்தனர் சவூத் குடும்பத்தினர். இந்த போரில் பங்கெடுப்பது ஜிஹாத் எனும் மார்க்கம் தொடர்புடையது என வஹ்ஹாப் அவர்களின் பத்வா இருந்ததால் சவூத் குடும்பத்தினைருக்கு வஹ்ஹாபிகள் (முவஹ்ஹிதூன்கள்) உதவினர். சவூத் குடும்பத்தின் ஆட்சி எல்லை விரிந்தது. வஹ்ஹாப் அவர்களின் பிரச்சாரமும் விரிந்தது. அதேநேரத்தில், வஹ்ஹாப் அவர்கள் மீதான விமர்சனமும் எழுந்தது.

அறியாமையால் அநாச்சாரங்களில் இருக்கும் முஸ்லிம்களை காபிர் என்று தீர்ப்பளிப்பதை பிற முஸ்லிம் அறிஞர்கள் எதிர்த்தனர். அவர்கள் மீது போர்செய்வது முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டுவதாகத்தான் ஆகும் என்றனர். ஆனால், ஷிர்க் செய்து காபிர் ஆகிவிட்டவர்களின் இரத்தம் ஹலால்தான் என்று போர்தொடர்ந்தது. இதுபோன்ற பிடிவாதமான அனுகுமுறைகளால் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றாளலர்கள் வஹ்ஹாபி என்றே அழைக்கப்பட்டனர்.

சவூத் குடும்பத்தின் ஆட்சிப் பரப்பு விரிவடையத் தொடங்கியதும் அது இஸ்லாமிய கிலாபத்தாக இருந்த  உஸ்மானியப் பேரரசின் (Ottoman empire) கவனத்திற்கு வருகிறது.

அது யாரு உஸ்மானிய கிலாபத்?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.


Part -2

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி