Skip to main content

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -3) (End)

 

*ஸலப் - வரலாற்றுப் பார்வை*
(Part -3) (End)

சவூத் குடும்பம் அரபு தீபகற்பத்தின் பெரும் பகுதியை கைப்பற்றிய நிலையில் அமைதியாக ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில் இக்வான்கள் பிரச்சினை செய்யத் தொடங்கினர்.

ஈராக் மற்றும் ஜோர்டானை நோக்கி ஜிஹாத் செய்து அந்த நிலப்பரப்புகளையும் கைப்பற்றி ஏகத்துவ ஜோதியை ஏற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின்  கோரிக்கை.

பிரிட்டனின் பாதுகாப்பில் இருக்கும் அந்த பகுதிகளை தாக்கினால் தமது ஆட்சிக்கும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் இக்வான்களின் கோரிக்கையை நிராகரிக்கிறது சவூத் குடும்பம்.

சவூத் குடும்பம் மேற்கத்தியர்களுடன் நெருக்கமாவதாக இக்வான்கள் உணர்ந்தனர். மேலும், புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள ஷியாக்களுடன் சவூத் குடும்பம் மென்மையாக நடப்பதை இக்வான்கள் விரும்பவில்லை.

இந்நிலையில்தான், இக்வான்களின் வேட்டையை தடுக்கும் விதத்தில்  ஆட்சியாளர் மட்டுமே ஜிஹாத்
அழைப்பு விடுக்க முடியும் என்ற பத்வா ஸலபு உலமா  பெருமக்களிடமிருந்து வந்து சவூத் குடும்பத்தின் அப்துல் அஜிஸ் இப்னு சவூத் மட்டும்தான் அந்த அழைப்பை விடுக்க முடியும் என்ற பத்வா இக்வான்களை கடுப்பேற்றியது.

அடங்க மறுத்தனர். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்காததால் சவூத் குடும்பம் இக்வான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. இக்வான்களுடன் போரிட்டது. 1929 ஆம் ஆண்டு சபில்லா (Battle of Sabilla) என்ற இடத்தில் நடந்த சன்டையில் பிரிட்டிஷ் விமானப் படையின் உதவியுடன் இக்வான்களின் கதையை முடித்தது சவூத் குடும்பம்.

இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முர்தத்தை கொல்லப்போகிறோம் என்று சொல்லி வாளேந்திய வஹ்ஹாபிகள் இறுதியில் தங்களுடைய கொள்கைச் சகோதரர்களான இக்வான்களை நோக்கியும் வாள்வீசினர்.

வஹ்ஹாபி மற்றும் இக்வான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தையும் இணைத்து தமது குடும்பப் பெயரையே சூட்டி 1932 ஆம் ஆண்டு 'சவூதி அரேபியா' என்ற நாட்டை அறிவித்தது சவூத் குடும்பம். பிரிட்டிஷ் அரசும் இதை அங்கீகரித்தது. உஸ்மானியப் பேரரசிற்கு மாற்றாக சவூதி அரேபியா கிலாபத் போல சித்தரிக்கப்பட்டது.

இவ்வாறாக, அப்துல் வஹ்ஹாப் அவர்கள் காட்டிய ஸலபு கொள்கை சவூத் குடும்பத்திற்கு பெரும் ஆட்சிப்பரப்பை பெற்றுத்தந்தது.

சவுதி அரேபியா என்ற நாடு உருவாவதற்கு முன்பு இருந்த ஸலபு கொள்கை உக்கிரம் நிறைந்தது. அப்போது இருந்த ஸலபு ஆலிம்கள் உக்கிரமானவர்கள். சவுதி அரேபியா உருவானதற்குப் பிறகு ஸலபு கொள்கை மென்மையாக மாறிவிட்டது. அதற்குப் பிறகு ஸலபு ஆலிம்களும் மென்மையாக உருகிவிட்டார்கள்.

சவுதி அரேபியா உருவானதற்குப் பிறகு மென்மைப்படுத்தப்பட்ட ஸலபு கொள்கை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இப்போதைக்கு நாம் பார்க்க வேண்டியது மென்மைப்படுத்தப்பட்ட அந்த 'ஸலபு கொள்கை'யைத்தான்.

அதேநேரத்தில், அரபுலகத்தில் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் பிரச்சாரம் செய்த அதே காலகட்டத்தில் இந்தியாவில் பிரச்சாரம் செய்த ஷா வலியுல்லாஹ் அவர்களின் பிரச்சாரம் செய்த ஸலபு கொள்கை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

மதினாவில் இப்னு தைமிய்யா அவர்களின் புத்தகங்களைப் படித்து பாடம் பயின்று இந்தியா திரும்பிய ஷா வலியுல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். இஸ்லாத்தை அதன் மூல ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸை ஸலபு ஸாலிஹீன்களின் வழியில் புரிந்து செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய வலியுல்லாஹ், இந்திய துனைக்கண்டத்தில் அதற்கான சாத்தியம் குறைவு என்பதை உணர்ந்து அங்கு பின்பற்றப்படும் ஹனபி மற்றும் ஷாபி மத்ஹபுகளை சீர்படுத்த வேண்டும் என்று கூறினார். குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு மாற்றமான மத்ஹப் கருத்துகளை விட்டுவிட வேண்டும் என்றார்.

1750 களில் முகலாயப் பேரரசு வலிமை குறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் மராத்திய படையெடுப்பை தடுக்கும் விதத்தில் ஜிஹாத் செய்ய ஆர்வமூட்டினார் வலியுல்லாஹ்.

அறியாமையினால் அநாச்சாரங்கள் செய்த முஸ்லிம்களுக்கெதிராக அப்துல் வஹ்ஹாப் செய்யச்சொன்ன ஜிஹாதைப் போன்றதல்ல இது. தற்காப்பிற்காக செய்யப்பட்து.

இதன் தொடர்ச்சியாக 1800 களில் முகலாயப் பேரரசு பிரிட்டனிடம் வீழ்ந்த பிறகு வலியுல்லாஹ்வின் மகன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் அறிவித்தார். வலியுல்லாஹ் அவர்களின் பேரனும் தொடர்ந்து வந்த காலங்களில் ஜிஹாத் அறிவித்தார். இவையெல்லாம் அரேபிய வஹ்ஹாபிகளின் ஜிஹாதைப் போன்றது அல்ல.

அரசியல் ரீதியில் மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் ஸலபு கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. குர்ஆன் மற்றும் சுன்னாவில் இருந்து ஆதாரம் காட்டப்படாத எதுவும் மார்க்கமல்ல என்ற பிரச்சாரம் செய்யட்டது.

மத்ஹப் மற்றும் சூபி கொள்கைகள் உள்வாங்கப்பட்டு இருந்த அந்த காலகட்டத்தில் ஸலபு கொள்கையை பிரச்சாரம் செய்தவர்களை நோக்கி உங்களுடைய மத்ஹப் என்ன? என்று  மத்ஹப்வாதிகள் கேட்டனர். உங்களுடைய தரீக்கா (வழிமுறை) என்ன என்று சூபியாக்கள் கேட்டனர்.

எங்களுடைய மத்ஹப் 'ஸலபு ஸாலிஹீன்களின் மத்ஹப்' என்றும் எங்களுடைய தரீக்கா 'முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தரீக்கா' என்றும் பதிலளித்தனர் ஸலபு கொள்கையாளர்கள்.

அதாவது, மத்ஹப் எதுவென்றால் அது "மத்ஹபுஸ் ஸலப்" (مذهب السلف) என்றும், தரீக்கா எதுவென்றால் அது "தரீக்கத்தும் முஹம்மதின்" (طريقة مُحَمَّد) என்றும் கூறினார்கள் ஸலபு கொள்கையாளர்கள்.

1820 ஆம் ஆண்டு 'தரீக்காயி முஹம்மதியா' (Tariqah-i-Muhammadiyya) என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டது. குர்ஆன் மற்றும் ஹதீஸின்படி செயல்படுவதுதான் இதன் நோக்கம்.
குர்ஆன் மற்றும் ஹதீஸின்படி செயல்பட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஜிஹாது செய்வதும் இதனுடைய அடிப்படை. வஹ்ஹாபிகள் என்றே இவர்களை பிரிட்டிஷ் அரசு அழைத்தது. சில காலங்களில் இதனுள் ஏற்பட்ட பல குளறுபடிகள் மற்றும் பாதிப்புகளால் பலர் ஜிஹாதை தவிர்த்து குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்யும்  வகையில் ஒன்றினைந்தனர். இவர்கள் தங்களை அஹ்லே ஹதீத் (Ahle-i-hadith) என்று அழைத்துக்கொண்டனர்.

எனினும், இவர்களையும் வஹ்ஹாபிகள் என்றே அழைத்தனர். பிரிட்டிஷ் அரசும் அப்படியே அழைத்தது. அஹ்லே ஹதீதைச் சார்ந்த Muhammad Hussain Batalvi என்பவர் பிரிட்டிஷ் அரசிடம் தங்களை வஹ்ஹாபி என்று அழைக்காமல் அஹ்லே ஹதீத் என்று அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். 1887 ஆம் ஆண்டு இவர்களை வஹ்ஹாபி என்று அழைக்கக்கூடாது என்றும் அஹ்லே ஹதீத் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு நிர்வாக ரீதியாக (Officialy) அறிவித்தது. மிர்சா குலாம் காதியானி என்ற பொய்யனின் முகத்திரையை கிழித்து அவனை ஈஸா(அலை) என்று ஏமாந்துகொண்டிருந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அஹ்லே ஹதீத் செய்த சிறப்பான செயல்களுள் ஒன்று.

அரசியல் சூழ்நிலை இந்தியப் பிரிவினை போன்ற காரணங்களால் முஸ்லிம்களுள் பல குழுக்கள் உருவாகி ஒவ்வொன்றும் தனக்கான பாதையை அமைத்துக்கொண்டன. அரசியலை தவிர்த்து மார்க்கத்தின் அடிப்படைகளை காப்பாற்றும் விதத்தில் தப்லீக் ஜமாத் உருவாகியது. அரசியலையும் மார்க்கத்தில் நவீன சிந்தனைகளையும் கொண்டு ஜமாத்தே இஸ்லாமி தோன்றியது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதுதொடர்பான குழப்பமான சூழ்நிலைகளால் அஹ்லே ஹதீஸ் அதற்குப் பிறகு பரவலாக ஆகவில்லை. கிட்டத்தட்ட சுருங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, அரபு தீபகற்பத்தில் ஸலபு கொள்கை விரிவடைந்ததுபோல் இந்தியாவில் விரிவடையவில்லை. (இந்திய சுதந்திரத்திற்குப் பின் கேரளாவில் 'முஜாஹித்' என்ற பெயரில் ஸலபி கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது)

சவுதி அரேபியா உருவான சில வருடங்களிலேயே அமெரிக்காவின் உதவியுடன் அங்கு எண்ணெய் வளம் (Oil) கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப் பிறகு கற்பனைக்கெட்ட முடியாத வளர்ச்சியை சவுதி அடைந்தது.

பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நிலையில் சவுதி அரேபியா, உலகம் முழுவதும் ஸலபு கொள்கையை பரப்ப Muslim World League (رابطة العالم الاسلامي) என்ற அமைப்பை 1962 ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதற்குப் பிறகு ஸலபு கொள்கை உலகம் முழுவதும் சுற்றிவரத் தொடங்கியது. அதாவது, சவுதி அரேபியா என்ற நாடு உருவானதற்குப் பிறகு மென்மையாக மாற்றப்பட்ட ஸலபு கொள்கை உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. தமிழ்பேசும் நல்லுலகில் 1970 க்குப் பிறகு ஸலபி கொள்கை கொஞ்சம் நுழையத் தொடங்கியது. 1980 க்குப் பிறகு கொஞ்சம் பரவலாகியது. அதற்குப் பிறகு அசுர வளர்ச்சி பெற்றது.

ஸலபு கொள்கையின் பரவல் தொடர்பான சுருக்கமான பார்வை மட்டுமே இது.

வேறு தலைப்புகளில் ஸலபு கொள்கையை இன்னும் அலசுவோம். வரலாற்றிற்கு முற்றும் போடுவோம்.

பிறை மீரான்.


Part-2

Popular posts from this blog

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -1)

இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,  இல்லுமினாட்டி இல்லை! இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!! இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!! என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.  முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.  இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பு

பூமியை அறிவோம்

பூமியை அறிவோம். . . (part - 1) அல்லாஹ் பூமியை மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். பூமிக்கு ஒளிகாட்ட சூரியனையும் , காலம் காட்ட சந்திரனையும் , பருவங்களை அறிவிக்க நட்சத்திரங்களையும் பணித்திருக்கிறான். நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு நமக்கு மிகவும் குறைவுதான். நம்முடைய முன்னோர்கள் நட்சத்திரக் கலையில் மேம்பட்டவர்கள். சூரியனைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கடுமையாக தர்கிக்கும் நாம் பூமியைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பூமியைப் பற்றி ஓரளவு அறிந்தாலே சந்திரனைப் பற்றிய பல சர்ச்சைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆகவே முதலில் நாம் பூமியைப் பற்றி பார்ப்போம். " வானங்களிலும் , பூமியிலும் உள்ளவற்றைச் சிந்தியுங்கள்! '' (10:101) வானங்களிலும் , பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. அவற்றைப் புறக்கணித்தே அவர்கள் கடந்து செல்கின்றனர். ( 12:105) என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் படைப்புகளை சிந்திக்கவேண்டியது நம் மீது கடமையாகிறது. மனிதன் பூமியை திடமானதாகவும் , பரந்து விரிந்ததாகவும் , நகராமல் நிலையாக நிற்பதாகவும் காண்கிறான். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் , "

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (Part -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.  ** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர். ** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர். ** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.  ** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது. ** நம்கதை முடிந்து விட்டது. ** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார். ** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம். மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.  இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதி