Skip to main content

Posts

*அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part-2)

 *அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part-2) தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் சார்ந்தவற்றை எப்படி அழைப்பது?  வானுலக நம்பிக்கையான தேவதை(Angel), அசுரர்(satan) போன்ற நம்பிக்கைகள் அஃறிணையாக கருதப்படுவதில்லை. ஏனென்றால், இவை மனிதனை விட அதிக ஆற்றல் பெற்றவையாக கருதப்படுகிறது.  மனிதரல்லாத மேல் திணை நம்பிக்கைகளை தனியாக அடையாளப்படுத்த வார்த்தையில்லை. இருப்பதைக் கொண்டுதான் அழைக்க முடியும்.  மனிதரை விட தாழ்நிலையிலுள்ளவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'அது' எனும் அஃறிணைச் சொல்லை பயன்படுத்த முடியாது. மனிதரை குறிப்பிட பயன்படுத்தும் 'அவன் & அவள்' எனும் உயர்திணையைத்தான் கொடுக்க வேண்டும். அப்படித்தான் கற்பிக்கப்படுகிறது. ** தேவதை(Angel) என்பது பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது. ** அசுரர்(satan) என்பதும் பெண்பாலாகவும் ஆண்பாலாகவும் கற்பிக்கப்படுகிறது.  இவை, ஆண்பாலில் அழைக்கப்பட்டாலும் பெண்பாலில் அழைக்கப்பட்டாலும் மனிதரை அழைப்பது போன்ற விதத்திலானது அல்ல. மனிதரை விட சற்று மேலான திணையாக கருதலாம். ¶¶ மனிதரை 'அவன் & அவள்' என்று அழைப்பது உயர்திணை.  ¶¶ மனிதர் அல்லா

*அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part -1)

 *அல்லாஹ்! - அவன்!- ஏன்?!* (Part -1) தமிழ் மொழியில் ஒரு மனிதன் சக மனிதனை 'அவன்' என்று விளிப்பது மரியாதை குறைவானதாக கருதப்படுகிறது.  'அவன்' எனும் அத்தகைய மரியாதை குறைவான வார்த்தையை  தமிழ்பேசும் முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு கொடுப்பது ஏன்?  'அவர்' என்று அல்லாஹ்வை அழைத்தால் மரியாதையாக இருக்குமே! என்று தமிழுலகில் கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழ் உலகத்தில் கேட்கப்படும்இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக மேற்குலகில் கேட்கப்படும் வேறொரு கேள்விக்கு பதில் தேடுவோம். அல்லாஹ் ஆணுமில்லை! பெண்ணுமில்லை!. அப்படியென்றால் அல்லாஹ்வை ஆண்பாலில் மட்டும் அழைப்பது ஏன்? என்பதுதான் மேற்குலகின் கேள்வி.  இந்த கேள்விக்கான பதிலை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் உலகின் கேள்விக்கு தெளிவான பதிலை நாம் புரியமுடியும். 'அல்லாஹ்' (اللَّهُ) என்ற அரபு வார்த்தைக்கு 'ஹுவ' (هُوَ) என்ற அரபு பிரதிபெயர் கொடுக்கப்படுவது உண்மைதான். அதாவது, அரபு மொழியில் ஓர் ஆண்  அழைக்கப்படுவது போலவே அல்லாஹ்வும் அழைக்கப்படுவது உண்மைதான்.  ஆனால், இது ஆண்களை அழைக்கும் ஆண்பால் அல்ல.  இதை புரிந்து

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -2)

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -2) முதலில் ஸம்ஸம் தொடர்பான சுருக்கமான வரலாற்றில் இருந்து தொடங்குவோம்... இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள் இறை கட்டளையின்படி அவரது மனைவி ஹாஜர்(அலை) மற்றும் குழந்தை இஸ்மாயில்(அலை) ஆகியோரை மக்காவின் பாலைவனத்தில் விட்டுவிட்டு போய்விடுகிறார். மனித குடியிருப்புகளோ நீர்நிலைகளோ இல்லாத அந்த பள்ளத்தாக்குப் பகுதியில் அக்குழந்தை பசியாலும் தாகத்தாலும் அழுதபோது உருவான நீரூற்றுதான் ஸம்ஸம் கிணறு. வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் அங்கே தோன்றி அவரது கால்களினால் நிலத்தில் அடித்ததால் ஸம்ஸம் உருவானது என்றும், குழந்தை இஸ்மாயில்(அலை) அவர்கள் அழுத நிலையில் கால்களால் தரையில் அடித்தபோது ஸம்ஸம் உருவானது என்றும் வெவ்வேறு விதத்தில் சொல்லப்பட்டாலும் ஸம்ஸம் நீரூற்று தோன்றிய விதம் அற்புதம்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மனித அரவமற்ற அந்த பள்ளத்தாக்கில் உருவான ஸம்ஸம் நீரூற்றின் காரணமாக மனித குடியிருப்பு தொடங்குகிறது. அந்த நீரூற்று கிணறாக மாற்றப்படுகிறது. இனக்குழுக்களின் மோதல் காரணமாக அங்கு சன்டைகள் பல நடந்த நிலையில் ஸம்ஸம் கிணறு கவனிப்பாரற்று போகிறது. மக்களின் அநீதி காரணமாக கிணற்று ந

*ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -1)

 *ஸம்ஸம் - தெளிவைத் தேடி!* (Part -1) ஸம்ஸம்!  மக்காவில் காபா எனும் இறையில்லத்தின் அருகாமையில் அமையப்பெற்றிருக்கும் ஒரு கிணற்றின் பெயர்தான் ஸம்ஸம். அந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரானது 'ஸம்ஸம் நீர்' என அழைக்கப்படுகிறது.  ஸம்ஸம் கிணறு தோன்றிய விதம் அற்புதம் (Miracle) என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ஸம்ஸம் கிணறு மற்றும் ஸம்ஸம் நீர் ஆகிய இரண்டும் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி அல்லாஹ்வின் அருள் நிறைந்தவை. இந்த நம்பிக்கைக்கு காரணம், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை உயர்வாக கூறியிருப்பதுதான்.  ** ஸம்ஸம் நீர் பூமியிலேயே சிறந்த நீராகும் ** ஸம்ஸம் நீர் பரக்கத் நிறைந்ததாகும் ** ஸம்ஸம் நீர் பானமும் உணவுமாகும் **ஸம்ஸம் நீர் நோய் நிவாரணியாகும் ** ஸம்ஸம் நீர் எதற்காக அருந்தப்படுகிறதோ அதற்கானதாகதாகும் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி ஸம்ஸம் நீர் மதிப்புமிக்கது. அதனால்தான், ஸம்ஸம் நீர் முஸ்லிம்களிடையே மதிப்பு மிக்க ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்களிடம் இருக்கும் தங்கம் வெள்ளி போன்றவற்றை பாதுகாப்பதுபோல் அவர்களுக்கு கிடைக்கும் ஸம்ஸம் நீரையும் ப

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -3) (End)

  *ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -3) (End) சவூத் குடும்பம் அரபு தீபகற்பத்தின் பெரும் பகுதியை கைப்பற்றிய நிலையில் அமைதியாக ஆட்சி செய்ய வேண்டிய நேரத்தில் இக்வான்கள் பிரச்சினை செய்யத் தொடங்கினர். ஈராக் மற்றும் ஜோர்டானை நோக்கி ஜிஹாத் செய்து அந்த நிலப்பரப்புகளையும் கைப்பற்றி ஏகத்துவ ஜோதியை ஏற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின்  கோரிக்கை. பிரிட்டனின் பாதுகாப்பில் இருக்கும் அந்த பகுதிகளை தாக்கினால் தமது ஆட்சிக்கும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் இக்வான்களின் கோரிக்கையை நிராகரிக்கிறது சவூத் குடும்பம். சவூத் குடும்பம் மேற்கத்தியர்களுடன் நெருக்கமாவதாக இக்வான்கள் உணர்ந்தனர். மேலும், புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள ஷியாக்களுடன் சவூத் குடும்பம் மென்மையாக நடப்பதை இக்வான்கள் விரும்பவில்லை. இந்நிலையில்தான், இக்வான்களின் வேட்டையை தடுக்கும் விதத்தில்  ஆட்சியாளர் மட்டுமே ஜிஹாத் அழைப்பு விடுக்க முடியும் என்ற பத்வா ஸலபு உலமா  பெருமக்களிடமிருந்து வந்து சவூத் குடும்பத்தின் அப்துல் அஜிஸ் இப்னு சவூத் மட்டும்தான் அந்த அழைப்பை விடுக்க முடியும் என்ற பத்வா இக்வான்களை கடுப்பேற்றியது. அடங்க மறுத்தனர்.

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -2)

  *ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -2) சவூத் குடும்பத்தினர் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தியது உஸ்மானிய கிலாபத்தின் பார்வையில் உறுத்தியதாகப் பார்த்தோம். சவூத் குடும்பம் தனது எல்லையை விரித்தால் உஸ்மானிய கிலாபத்திற்கு என்ன பிரச்சினை இருக்கு? முஸ்லிம்களின் தலைமையகமாக செயல்பட்டு வந்த ஒரு பேரரசுதான் உஸ்மானிய கிலாபத். ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்திருக்கும் துருக்கியை தலைநகரமாகக் கொண்டு பெரும் சாம்ராஜ்யம் நடந்து வந்தது. 1517 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் ஹிஜாஸ் (Hejaz) பகுதிகளை உஸ்மானியப் பேரரசு வீழ்த்தியபோது, மக்கா மற்றும் மதினா ஆகிய இரு புனித நகரங்களின் சாவியும் அவற்றை நிர்வகித்தவர்களால் உஸ்மானியப் பேரரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சாவியை ஒப்படைத்தவர்களையே தமது பிரதிநிதிகளாக நியமித்தது உஸ்மானியப் பேரரசு. அரபுதீபகற்பத்தில் பன்னெடுங்காலமாக தனது ஆளுமையை செலுத்தி வந்த உஸ்மானியப் பேரரசு, சிறு சிறு நிலப்பகுதிகளை கைப்பற்றி வஹ்ஹாபிகளின் தலைமையில் ஒரு பெரிய அரசு உருவாவதை எப்படி அனுமதிக்கும்? அதுவும் மக்கா மற்றும் மதினா ஆகிய புனித தலங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது அவ

*ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -1)

  *ஸலப் - வரலாற்றுப் பார்வை* (Part -1) ஸலபு கொள்கையையின் வரலாறை வரலாற்றின் துனை கொண்டு பார்ப்போம்... ஸலப் கொள்கையின் வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? உதாரணமாக, தமிழுலகில் தவ்ஹீத் எழுச்சி எப்போது தொடங்கியது என்று கேட்டால் அது 80 களில் தொடங்கியதாக சொல்வோம் (1980 ). இந்த காலகட்டத்திலிருந்து வரலாற்றில் தேடுதலை துவங்கினால் தவ்ஹீத் எழுச்சியின் வரலாற்றை நாம் பார்க்க முடியும். இதுபோல, ஸலபு கொள்கையின் எழுச்சி எப்போது ஏற்பட்டது என்பதை வரலாற்றில் தேடுவோம். ஸலபு கொள்கையின் எழுச்சியை வரலாற்றில் இரண்டாகப் பிரிக்க முடியும். ** சவுதி அரேபியா என்ற நாடு உருவானதற்குப் பிறகு எழுச்சி பெற்ற ஸலபு கொள்கை ** சவுதி அரேபியா என்ற நாடு உருவாவதற்கு முன்பாக எழுச்சி பெற்ற ஸலபு கொள்கை என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏனென்றால், சவுதி அரேபியா என்ற நாடு உருவாவதற்கு முன்பு இருந்த ஸலபுக் கொள்கை என்பது இப்போது இருப்பது போன்று மென்மையானது அல்ல. ரோஜாச் செடியில் முள் இருப்பதுபோல் அப்போது இருந்த ஸலபுக் கொள்கையில் சில கசப்புகளும் இருக்கத்தான் செய்தன. கறுப்புப் பக்கங்கள் நிறைந்த அந்த  வரலாற்றில் விரும்பத்தகாத கறுப்பு பக்கங்க